சென்னிமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் முகாசிபிடாரியூர் தியாகி குமரன் நகருக்குள் வெள்ளம் புகுந்தது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள முகாசிபிடாரியூர் குமரன் நகரில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், இன்று பெய்த கனமழையின் காரணமாக இப்பகுதியின் தாழ்வான பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளநீர் புகுந்தது.
இந்த மழைநீர் சென்னிமலை கருப்பண்ணன் கோவில் பள்ளத்தில் இருந்து, தியாகி குமரன் சாலை பின்புறம் செல்கிறது. மேலும், இப்பகுதியில், நிறைய ஜம்பு புற்கள் வளர்ந்துள்ளதால் தண்ணீர் தேங்கியும், மழைநீர் பெருக்கெடுத்து வருவதால் பகுதிகளுக்குள் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் சூழ்ந்துள்ளது.
தற்போது, அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் பொதுமக்கள் தங்கியுள்ளனர். ஊராட்சி மன்ற தலைவர் கேபிள் சி.நாகராஜ் சம்பவ இடத்திற்கு சென்று, பின்புற பள்ளத்தில் உள்ள புற்களை அகற்றி வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
0 coment rios: