வியாழன், 2 மே, 2024

கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகம், கோபிசெட்டிபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பொலவகாளிபாளையம், செய்யாம்பாளையம், செங்களக்கரை, அளுக்குளி, நல்லகவுண்டன்பாளையம் மற்றும் சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட மாக்கினாங்கோம்பை, அரியப்பம்பாளையம் ஆகிய கிராம நிர்வாக அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, பட்டா மாறுதல், பல்வேறு சான்றிதழ்கள் வழங்குதல், நில அளவை போன்ற அத்தியாவசியப் பணிகள் உரிய நேரத்தில், சரியான முறையில் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் எனவும், மேலும், அரசு பதிவுகளில் திருத்தம், சேர்த்தல், நீக்கம் போன்றவற்றை ஆவணங்களில் சரியான முறையில் மேற்கொண்டு, அவற்றை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது, கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர் கார்த்திகேயன் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: