சேலம்.
S.K. சுரேஷ் பாபு.
சேலம் மாவட்டம், ஓமலூர் தீவட்டிப்பட்டியில் நேற்று கோவில் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சனை எழுந்தது. இந்த பிரச்சனையானது நேரம் செல்ல செல்ல கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் வீடுகள் மற்றும் கடைகள் எரிக்கப்பட்டன. இதனை எடுத்து காவல்துறையினர் சி சி டிவி காட்சிகளை மையமாகக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில், எரிக்கப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளரும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினருமான இரா. அருள் மற்றும் மேட்டூர் சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சதாசிவம் உள்ளிட்டோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் இந்தக் கலவரத்திற்கு காரணம் அல்லாதவர்களையும் காவல்துறை கைது செய்துள்ளதாக கூறி காவல்துறை உயர் அதிகாரியிடம் பேசி அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்ட மக்களிடம் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்தனர்.
இந்த ஆய்வு பணியின் போது சேலம் மாநகர் மாவட்ட பாமக தலைவர் கதிர் ராச ரத்தினம், பசுமைத்தாயகம் அமைப்பின் இணை செயலாளர் சத்ரிய சேகர், சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் ராஜசேகர், ஓமலூர் நகர பாமக தலைவர் மாணிக்கம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலரும் உடன் இருந்தனர்.
0 coment rios: