குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை தலைவர் ஜோசி நிர்மல்குமார் உத்தரவுபடி ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான புகார் மற்றும் தகவலை தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறைக்கு 18005995950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
மேலும் அந்த துறையில் உள்ள ஈரோடு சரக காவல் துணை கண்காணிப்பாளர் 94981 68363, ஈரோடு மாவட்ட காவல் ஆய்வாளர் 80726 28234, ஈரோடு மாவட்ட காவல் உதவி ஆய்வாளர் 94981 75888 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகார் மற்றும் தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்.
இந்த தகவல் குறித்து ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினர், பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ரயில் நிலையம், பஸ் நிலையம் ஆகிய இடங்களில் சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: