S.K. சுரேஷ்பாபு.
தன் நலம் பாராமல், பொதுநலனுக்காக மக்கள் பணி செய்தமையை பாராட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் இரண்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட சேலத்தைச் சேர்ந்த நாகா. அரவிந்தன்.
குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி சார்பாக சென்னையில் நடைபெற்ற விழாவில் சேலத்தைச் சேர்ந்த தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் நாகா. அரவிந்தன் அவர்களுக்கு சிறந்த சமூக சேவைக்கான *குளோபல் அம்பாசிடர் அவார்டு* -( 2024 ), என்ற விருதுநை தமிழ்நாடு அரசு முன்னாள் முதன்மை செயலாளர் திரு. K. சம்பத்குமார் ஐ.ஏ.எஸ்,. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி ஓய்வு பெற்ற நீதிபதி திரு K. வெங்கடேசன் மற்றும் ஸ்டேட் ஹியூமன் ரைட்ஸ் கமிஷன் ஓய்வு பெற்ற உறுப்பினர் டாக்டர் A.C. மோகன்தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, அறம் செய்ய விரும்பு அறக்கட்டளையின் சார்பாக சேலத்தைச் சேர்ந்த தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனர் நாகா. அரவிந்தன் அவர்களுக்கு "அறம் விருதுகள்" ( 2024 ), என்ற சிறந்த மக்கள் பணி கேடயமாக சென்னையில் நடைபெற்ற விழாவில்,
சிறப்பாக மக்கள் சேவை பொருந்தமைக்காக *இளம் சாதனையாளர்* விருதினை பிரபல திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு பாக்யராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நீதியின் குரல் நிறுவனர் C.R. பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: