ஞாயிறு, 26 மே, 2024

ஈரோட்டில் தொழிலாளர் தின ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த குதிரைகள், காளைகள்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே லக்காபுரத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ரேக்ளா அசோசியேஷன் மற்றும் ஈரோடு நாட்டு மாடுகள் பாதுகாப்பு குழு மற்றும் ஆதிவனம் சார்பில் 18ம் ஆண்டு குதிரை, காளை ரேக்ளா போட்டி நடைபெற்றது.
இதில், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கரூர், திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களை ஏராளமான காளை மாடுகளும், குதிரைகளும் கலந்து கொண்டனர். ஒற்றை மாடு பந்தயம் இரண்டு பிரிவுகளாகவும், குதிரை பந்தயம் மூன்று பிரிவுகளாகவும் போட்டிகள் நடைபெற்றன. 8 மைல் ,10 மைல், 6 மைல் தூரம் நடைபெற்றன.

காளை மாடுகளுக்கான ரேக்ளா போட்டியை திமுக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து குதிரை ரேக்ளா போட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர் ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில் கலந்து கொண்ட காளைகளும் குதிரைகளும் சீறி பாய்ந்து இதில் வெற்றி பெற்ற பெரிய ஒத்த மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ.25,000 ரூபாய் ரொக்கம் பெரிய குதிரைகளுக்கு 30 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கேடயங்களும் வழங்கபட்டன. பந்தய தூரத்தை ஒவ்வொரு குதிரையும் மாடும் போட்டி போட்டுக்கொண்டு இலக்கைக் அடைந்தது பார்வையாளர்கள் கவர்ந்தது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: