இந்நிலையில் கடையிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனை அடுத்து தீ மளமளவென பரவி கடை முழுவதும் பரவி உள்ளே இருந்த விவசாய பண்ணை கருவி பொருட்கள் தீயில் எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஈரோடு, மொடக்குறிச்சி ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த ஐந்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் நேரில் சென்று தீயை அணைக்கும் பணியை பார்வையிட்டு உடனடியாக தீயை மற்ற கடைகளுக்கு பரவாமல் இருப்பதற்கான ஏற்பாட்டை செய்யுமாறு அறிவுறுத்தினார். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். எனினும் கடையில் இருந்த சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், தீ விபத்து சம்பவத்தை அடுத்து ஈரோடு - கரூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஈரோடு தாலுக்கா போலீசார் விசாரிக்கின்றனர்.
0 coment rios: