புதன், 5 ஜூன், 2024

பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து சேலம் 9 - வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் பேசிய வீடியோ வைரல்.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து சேலம் மாமன்ற உறுப்பினர் தெய்வம் ஆட்டுக்குட்டியிடம் பேசிய வீடியோ வைரல்.

சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு திரு. T.M. செல்வகணபதி M.A.,L.L.B., அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். சேலம் மாநகரம் உட்பட மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அவருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். 
இதேபோன்று சேலம் மாநகராட்சி 9 - வது கோட்ட திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செல்வ கணபதிக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். 
 
இதனிடையே

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரி இடம் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையை விமர்சித்து ஏராளமானோர் ஆட்டுக்குட்டியை ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். 
அதேபோல சேலம் மாநகராட்சி 9 - வது கோட்டை திமுக மாமன்ற உறுப்பினர் தெய்வலிங்கம் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 
அதில் கட்டிப்போட்டு உள்ள ஆட்டுக்குட்டி இடம் சென்று தெய்வ லிங்கம் பேசுகிறார். 
அப்போது, " இதோ பார்  அண்ணாமலை...... முன் பின் தெரிந்து மோது சூரியன் கிட்ட மோதினா சுட்டெரித்து விடும் என ஆட்டுக்குட்டியை பார்த்து பேசுகிறார்".

இவரது பதிவு சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் லைக் செய்து வருகின்றனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: