இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை இது குறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் இடம் பல முறை புகார் அளித்து உள்ளனர். புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை எனக்கூறி அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஈரோடு காந்திஜி சாலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக ஈரோடு காந்திஜி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து களைந்து சென்றனர். இதனால், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 coment rios: