திராவிட இயக்கத்தின் தாய் வீடு, பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண், கணித மேதை ராமானுஜன் பிறந்த மண், மஞ்சள் மாநகரம், ஜவுளி சந்தை என பல்வேறு பெருமைகளை கொண்ட ஊராக ஈரோடு விளங்கி வருகிறது. ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி தமிழ்நாட்டின் 17வது தொகுதி.
2004ம் ஆண்டு தேர்தல் வரை ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இல்லை. அதன் பிறகு, 2008ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது, திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதி நீக்கப்பட்டு, அதிலிருந்து சில தொகுதிகளை எடுத்தும், புதிய தொகுதிகளைச் சேர்த்தும் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கயம், தாராபுரம் (தனி), குமாரபாளையம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை இணைத்தும் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.
தொகுதி சீரமைப்பிற்கு பின்பு 2009, 2014, 2019 மற்றும் 2024 ஆகிய 4 பொதுத் தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்தது. 2009ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014ல் நடந்த தேர்தலில், அதிமுக வேட்பாளர் செல்லகுமார சின்னையன் வெற்றி பெற்றார். 2019ல் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக கணேசமூர்த்தி வெற்றி பெற்றார்.
தற்போது 2024ல் திமுக வேட்பாளர் முதல்முறையாக வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம், ஈரோடு தொகுதியின் முதல் திமுக எம்பி என்ற பெயரை கே.இ.பிரகாஷ் பெற்றுள்ளார். ஈரோடு தொகுதியை திமுக கூட்டணி 2வது முறையாக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: