ஈரோடு மாவட்டம் கோபி பகுதியைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் சொந்த வேலை காரணமாக கோபி ல.கள்ளிப்பட்டி வேலுமணி நகர் ஆசிரியர் காலனியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த அளுக்குளி பகுதியைச் சேர்ந்த ஜெயசுதா (வயது 36) என்பவர் தனக்கு தெரிந்த பெண்ணை வைத்து விபசாரம் செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும், ரூ.1,000 தந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, அந்த நபரை ஜெயசுதா ஒரு வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்த பொழுது உள்ளே ஒரு பெண் இருந்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் தன்னிடம் போதிய பணம் இல்லை என்றும், வெளியே சென்று ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வருவதாக கூறி சென்றார்.
பின்னர், அந்த நபர் விபசாரத்தை தடுக்கும் நோக்கத்தில் கோபி காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் போலீசார் ஜெயசுதாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அங்கிருந்த பெண்ணை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரது உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர்.
0 coment rios: