சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் நாராயண நகர் பகுதியில் 76 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்து இந்து அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் பிரஷர்ஸ் டே புதிதாக முதல் வகுப்பு சேர்ந்த குழந்தைகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் குழந்தைகளுக்கு கிரீடம் அணிவித்து ரோஜாக்கள் சாக்லேட் கொடுத்தும் வரவேற்றனர் முதல் வகுப்பு சேர்ந்த குழந்தைகள் அனைவருக்கும் பள்ளி சார்பாக டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் நரேஷ் கிங்கர், கமிட்டி தலைவர் ராம்சந்த் கிங்கர், செயலாளர் ரமேஷ் லால் பதீஜா மற்றும் பொருளாளர் தீபக் பதீஜா ஆகியோர் கலந்து கொண்டனர். முதல் வகுப்பில் மாணவர் சேர்க்கை 100 என்ற எண்ணிக்கையை தாண்டி செல்வதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி லதா அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
0 coment rios: