ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், பர்கூர் ஊராட்சி, அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வகுப்பறைகள், கணினி ஆய்வகம், மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் கழிப்பறை ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பர்கூர் ஊராட்சியில் சமுதாய நலக்கூடம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியினையினையும், பெஜ்ஜிலிபாளையத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தின் கீழ், ரூ.46.87 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார துணை நிலையம் கட்டும் பணியினையும், தட்டக்கரை வனச்சரக அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ், ரூ.1.40 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் அளவீட்டு கருவி கட்டும் பணியினையும் அவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, தாமரைக்கரை கர்கேகண்டி வன சோதனை சாவடியினையும், பர்கூர் ஊராட்சி, ஊசிமலை வணிக வளாக பாதை அமைப்பது குறித்தும், பர்கூர் ஊராட்சி தாமரைகரையில் பழங்குடியினர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 9 வீடுகள் தலா ரூ.4.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து, அந்தியூர் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தத்துடன் கூடிய கடைகள் கட்டும் பணியினையும், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.23.97 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், அந்தியூர் அரசு மருத்துவமனையில், கூடுதல் கட்டிடம் கட்டப்படவுள்ள இடத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின்போது, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், ஆனந்தன், அந்தியூர் பேரூராட்சி செயல் ரமேஷ்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
0 coment rios: