சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான செயில் ரெப்ரேக்டரி நிறுவனம் சேலம் மாமாங்கம் பகுதியில் செயல்பட்டு கொண்டுள்ளது. இடது புறம் உள்ள இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் நிலப்பரப்பில் சுரங்க பகுதி தேசிய நெடுஞ்சாலையின் வலது புறத்தில் உள்ளது.
சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பொது துறை நிறுவனத்தின் மைன்ஸ் பகுதியில் சந்தன மரங்கள் உட்பட ஏராளமான விலை உயர்ந்த மர வகைகள் செழித்து வளர்ந்து உள்ளன. இந்த நிலையில், வளர்ந்த 70 கும் மேற்பட்ட சந்தன மரங்களை வெட்டி கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை சேலத்தில் ஏற்படுத்தி உள்ளது.
செயில் நிறுவனம் மற்றும் அதற்கு சொந்தமான சுரங்கப் பகுதியில் இரவு பகல் என 24 மணி நேரமும் ஏராளமான தனியார் நிறுவன காவலாளிகள் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே வெளியே பயிரை மேய்ந்தது என்ற ஒரு முது மொழியும் உள்ளது, அதற்கு ஏற்ப சந்தன மரங்களை வெட்டி கடத்திய நகர்களையும், SRCL காவலர் பணியின் மேற்பார்வையாளர் Head Guard சுப்ரமணி மற்றும் வேலு ஆகியோர் சந்தன மரம் கடத்தலுக்கு துணை போய் உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்களுக்கு துணைபோன தனியார் பாதுகாப்பு நிறுவன தலைமை காவலாளி மற்றும் அவர்களது கூட்டாளிகளுடன் SRCL நிறுவனத்தின் அதிகாரி முருகேசன் அதிகாரி மதுசெட்டி ஆகியோர் இந்த சந்தன மரம் கடத்தலில் துணை இருப்பதாகவும், அதற்காக பல லட்சம் ரூபாய் கடத்தல் நபர்களிடம் பெற்றுள்ளதாகவும் வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக உள்ளது.
எனவே கடத்தல் காரர்களையும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பாதுகாவலர்களையும் இந்த சமூக விரோத செயலுக்கு தங்களது பங்கிற்கு கைகோர்த்த ஒரு சில நிறுவன அதிகாரிகளையும் SRCL நிர்வாக அதிகாரி CEO அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சேலம் மாவட்ட வன சரகர் விசாரணை செய்து உரிய குற்றவாளிகளையும் இதற்கு துணைப் போன பாதுகாப்பு அதிகாரி உட்பட காவலாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்பது பொது மக்கள் மற்றும் SRCL காவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சேலம. மாவட்ட மாநகர காவல் துறை இந்த பல லட்சம் மதிப்புள்ள சந்தன மர கடத்தல் குறித்து விசாரணை செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்த சந்தன மரங்கள் கடத்தல் குறித்து SRCL காவலர்கள் நல சங்க நிர்வாகிகள் ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், விடுதலை தொழிலாளர்கள் முன்னணியின் மாநில துணை செயலாளருமான சரஸ்ராம் ரவி அவர்கள் SAIL தலைமை அதிகாரி, விஜிலென்ஸ் அதிகாரி , மாவட ட ஆட்சியர் - சேலம் மற்றும் வன சரக அதிகாரி ஆகியோருக்கு புகார் அளித்தம் விசாரணை துவங்கபடாமல் உள்ளது வேதனைக்குரிய ஒன்று.
மத்திய அரசுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சுரங்கப் பகுதியில் அதிகாரிகள் மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன தலைமை பாதுகாப்பு அதிகாரிகள் துணையுடன் கடத்தல்காரர்கள் அரங்கேற்றிய இந்த கடத்தல் சம்பவம் குறித்து மத்திய மாநில அரசுகளின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சேலம் மாநகர பொது மக்கள் ஆதங்கப்பட்டு கோரிக்கை முன்வைக்கின்றனர்.
0 coment rios: