புதன், 19 ஜூன், 2024

மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க சிறப்பு முகாம்: ஈரோடு ஆட்சியர் தகவல்

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

ஈரோடு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்து பயண அட்டையை புதுப்பிக்க சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தினை போக்கிடும் வகையில் ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 2024-2025-ஆம் ஆண்டிற்கான புதிய பேருந்து பயண அட்டை மற்றும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பேருந்து பயண அட்டையை புதுப்பித்து வழங்கிட சிறப்பு முகாம் நாளை (20ம் தேதி) மற்றும் நாளை மறுநாள் (21ம் தேதி) ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் புகைப்படம்-6, தேசிய அடையாள அட்டை நகல்-2 பழைய பேருந்து சலுகை அட்டை அசல் ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: