அதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் பேக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து, வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், மிக சிறந்த செயல்பாடுகள் கொண்ட மாவட்டம் ஈரோடு மாவட்டம் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் 3 அலுவலகத்தை ஈரோட்டில் திறந்து வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
மேலும், நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கூட, இதுபோன்ற ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு பல்வேறு பிரச்சனைகளுடன் சேர்த்து குறைந்தது 15 நாட்களாவது ஆகும் என்றும், ஆனால் இன்று தளபதி என்ற ஒற்றை பெயருக்காக இளைஞர்கள் உட்பட அனைத்து மக்களும் திரண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், தலைவர் விஜய்யின் அறிவுரைப்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பு பணிகள் செய்து வருவதாகவும், விஜய் எப்போது மக்கள் சந்திப்பார் குறித்து முறையாக அறிவிப்பு வரும் என்றும் கூறினார்.
மேலும், தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து தளபதி அறிவிப்பார் என்றும், மாநாட்டு நடைபெறுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த அவர், கடந்த 30ஆண்டுகளாக மக்கள் சேவை பணி செய்து வருவதால், வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் சேவைக்கு உண்டான பலன் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என கூறினார்.
0 coment rios: