சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய உயிர் பலிகளை கண்டித்து சேலத்தில் பாஜகவின் ஆர்ப்பாட்டம். அனுமதியை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுரத்தில் ஏற்பட்ட கள்ளச்சாராய உயிர் பலி எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சேலம் கள்ளக்குறிச்சி விழுப்புரம் மற்றும் புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் ஏராளமானோர் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதும் பாஜகவின் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில துணை தலைவர் ஜே பி ராமலிங்கம் தலைமை வகித்தார்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த நிலையில், தமிழக அரசுக்கு எதிராக கள்ளச்சாராய விஷ உயிர் பலியை கண்டித்து பல்வேறு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அப்போது அனுமதியில்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்து காவல்துறை வாகனங்களில் ஏற்றினர். அதனையும் மீறி பாஜகவினர் காவல்துறையினரிடம் தங்களை விடுவித்துக் கொண்டு மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர் அப்பொழுது, கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட சாராய உயிர் பணிகளை கண்டித்து பல்வேறு முழக்கங்களை எழுப்பியதோடு இதற்கு காரணமான தமிழக அரசு பதவி விலக வேண்டும்
என்று கோஷமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மாவட்ட பாஜகவினர் உட்பட மாநில நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: