இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி அரசியல் கட்சி அங்கீகாரத்தை பெறுவதற்கான தகுதியை பெற்று விட்டது. சிதம்பரம் தொகுதியில் 3-வது முறையாக தொல்.திருமாவளவன் வெற்றி வாகை சூடியதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுவதும் கட்சியினர் பட்டாசு, வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் அமைந்துள்ள அம்பேத்கர் மற்றும் பெரியார் சிலைகளுக்கு ஈரோடு, திருப்பூர் மண்டல துணைச் செயலாளர் ஏ.ஜாபர் அலி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் எ.அரங்க முதல்வன், மேற்கு சட்டமன்ற தொகுதி செயலாளர் வி.சண்முகம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் ம.ரஞ்சித், ஒன்றிய செயலாளர் சரண் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: