S.K. சுரேஷ்பாபு.
சேலம் மக்களவைத் தொகுதி
வெற்றி நிலவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டி.எம்.செல்வகணபதி (திமுக) – 5,66,085, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் சேலம் மக்களவை திமுக உறுப்பினராக டி எம் செல்வகணபதி வெற்றி பெற்றார்.
இவருக்கு, ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் தலைவரும், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் நிறுவனருமான Dr. நாகா. அரவிந்தன் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதற்கு அடுத்தபடியாக, ப.விக்னேஷ் (அதிமுக ) – 4,95,728,
என். அண்ணாதுரை (பாமக) – 1,27,139 மற்றும் டாக்டர் மனோஜ்குமார் (நாம் தமிழர் ) – 76,207 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தனர்.
சேலம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அண்ணாதுரை தனது டெபாசிட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோக, தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணியினர் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர் என்பதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் மாவட்டம் சொந்த ஊராக இருந்தாலுமே கூட சேலம் உட்பட தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றி வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 coment rios: