கள்ளக்குறிச்சியில் நடந்த விஷ சாராய மரணம் ஜீரணிக்க முடியாததாகும். அதிகாரிகளின் மெத்தன போக்கை உணர்ந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கை எடுத்ததை ஏற்றுக்கொள்கிறோம். அதே நேரம் சாராயம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இந்த சம்பவத்துக்கு பின் னர் தமிழ்நாடு முழுவதும் போலிசார் விரட்டிப்பிடித்து கைப்பற்றும் சாராய ஊறல்களின் எண்ணிக்கையை பார்த்தால் மாநிலம் முழுவதும் சாராயம் ஊடு ருவிப்போய் இருக்கிறது என்பதற்கு சான்றாக உள்ளது.
கொத்துக்கொத்தாக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் விஷ சாராயத்துக்கு பலியாவதை தடுக்க வேண்டும். இதற்கு அதிகாரிகளை பணியிடை நீக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்வது மட்டுமே தீர்வாகாது. சாராயம் மற்றும் போதைப்பொருள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண ஆளும் கட்சியின் பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் யாராக இருந்தாலும் இந்த குற்றச்செயல்களுக்கு துணை போகக்கூடாது. அப்படி குற்றச்செயல்களில் ஈடுபடும் நிர்வாகிகள், துணைபோகும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். எந்த கட்சி ஆளும்கட்சியாக இருந்தாலும் அந்த கட்சித்தலைமை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: