ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான சு.முத்துசாமி அறிவிப்பிற்கிணங்க, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈரோடு சோலாரில் உள்ள இளைஞர் அணி கொடி கம்பத்தில் மாவட்ட துணை அமைப்பாளர் ச.சதீஷ்குமார் தலைமையில், மாநகரச் செயலாளர் மு.சுப்பிரமணியம், கொல்லம்பாளையம் பகுதி திமுக செயலாளர் க.லட்சுமணகுமார், மாநகர அமைப்பாளர் கே.டி.சேந்தப்புகழன் ஆகியோர் முன்னிலையில் 60வது வட்டத் திமுக செயலாளர் பாலமுகுந்தன் கொடியேற்றினார்.
தொடர்ந்து, சோலார் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அட்சயம் அறக்கட்டளை மறுவாழ்வு இல்லத்தில் மாவட்ட அமைப்பாளர் ஜெ.திருவாசகம் தலைமையில், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கி.ரகுராம், எஸ்.பாலசுப்பிரமணியம், ச.சதீஷ்குமார், தெ.ராகவேந்திரன், எஸ்.எஸ்.விஜயராஜன், இரா.நித்தின் ஆகியோர் முன்னிலையில் ரூபாய் 25 ஆயிரம் மதிப்புள்ள அரிசி, மாளிகை பொருள்கள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் சு குணசேகரன், செங்கோட்டையன், ராஜா, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் செ.ரமேஷ், எஸ். சசிகுமார், அ. பார்த்திபன், பெ.சீனிவாசன், வி.நவீன்குமார், ஏ.அன்பரசன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, மாநகர பகுதி திமுக நிர்வாகிகள் இளைஞர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெ.திருவாசகம் செய்திருந்தார்.
0 coment rios: