சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கை துண்டிக்கப்பட்ட நோயாளிக்கு சேலம் காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை ( ரீ - இம்ப்லாடேசன் ) வழங்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹெல்த் கேர் மருத்துவக் குழுமங்களில் ஒன்றான காவேரி மருத்துவமனைகள் சிகிச்சை மற்றும் நவீன தொழில்நுட்ப சிகிச்சைகள் மற்றும் சேவைகள் வணங்குவதில் எப்பொழுதும் முன்னிலையில் உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சேலம் காவேரி மருத்துவமனைக்கு கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, இரவு 11 மணி அளவில் கொண்டுவரப்பட்டார்.
அவருக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டு அதன் காரணமாக கை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தது. விபத்து ஏற்பட்ட இரண்டு மணி நேரத்தில் ஐஸ் பெட்டியில் துண்டிக்கப்பட்ட கையுடன் பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எலும்பியல் நிபுணர் டாக்டர். அருண் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் நோயாளியை பரிசோதித்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள தொடங்கினர்.
சுமார் ஆறு மணி நேரம் நீடித்த கை மறு பொருத்தும் அறுவை சிகிச்சை நோயாளிக்கு மேற்கொள்ளப்பட்டது. இந்த சிகிச்சை மைக்ரோ - வாஸ்குலர் அறுவை சிகிச்சை ஆகும். இவ்வாறு அறுவை சிகிச்சையில் எழும்பியல் நிபுணர் எலும்பை சரி செய்வதும் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மென்மையான திசுக்களை நுணுக்கமாக சரி செய்வதையும் மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சைக்கு பிந்தைய காலகட்டத்தில், அலர்ஜியை தவிர்க்கவும், காயத்திற்கு முறையான பராமரிப்பு வழங்கவும் ஏதுவாக நோயாளிக்கு ஐ சி யூ வில் சிகிச்சை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 14 நாட்கள் ஆன பிறகு கை நன்றாக குணமடைந்த உடன் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து பிளாஸ்டிக் மற்றும் அழகு சாதன அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார், செய்தியாளர்களிடம் கூறுகையில், விபத்து அல்லது காயம் காரணமாக கைவிரல், கை, கால் ஆகியவற்றில் துண்டிப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் எழும்பை சரி செய்து மென்மையான திசுக்களை சரி செய்வதன் மூலம் துண்டிக்கப்பட்ட உடற்பகுதியை மீண்டும் பொருத்தும் அறுவை சிகிச்சை உடனடியாக செய்யும்படி, நாங்கள் பரிந்துரைக்கிறோம். இத்தகைய மறு பொறுத்துதல் அறுவை சிகிச்சையின் நோக்கம் துண்டிக்கப்பட்ட உடல் பாகத்தில் அசல் உருவம் மற்றும் செயல்பாட்டை மீட்டெடுப்பது ஆகும்.
இந்த சந்தர்ப்பத்தில் என்னுடன் இணைந்து, தங்கள் நிபுணத்துவத்தை வழங்கி ஒருங்கிணைத்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு நோயாளியின் ஆரோக்கியத்தை மீட்டெடுத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். சேலம் காவேரி மருத்துவமனை இது போன்ற மறு பொருத்துதல் அறுவை சிகிச்சை மேற்கொள்கின்றன என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவதே இந்த செய்தி வெளிப்பாட்டின் நோக்கமாகும். மேலும் இந்த அறுவை சிகிச்சைக்கு, பரிந்துரைக்கப்படும் நோயாளிகள் துண்டிக்கப்பட்ட தங்களது உடல் பாகத்தை முறையாக பாதுகாக்கப்பட்ட சுத்தமான பிளாஸ்டிக் கவரினுள் வைத்து அதனை சுற்றி ஐஸ் கட்டிகள் இருக்கும் படியாக ஒரு ஐஸ் பெட்டியில் வைத்து கொண்டு வரும்படியாக அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றார்.
நோயாளிகளை மீட்டெடுப்பதில் தங்களின் நிபுணத்துவம், கவனிப்பு மற்றும் அற்பணிப்பை வழங்கிய டாக்டர் சுரேஷ்குமார் மற்றும் டாக்டர் அருண் ஆகியோரின் குழுவினரை பாராட்டிய மருத்துவமனையின் இயக்குனர் திரு செல்வம் அவர்கள் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களுக்கு மருத்துவத் தீர்வுகளை வழங்கும் சிறப்பு மையமாக காவேரி மருத்துவமனை மீண்டும் நிலைநாட்டுகிறது என்றார். இந்த மருத்துவ சிகிச்சையை வெற்றிகரமாக நடத்திய மருத்துவ குழுவினர் அனைவருக்கும் சேலம் காவேரி மருத்துவமனையின் தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் சுந்தரராஜன் மற்றும் மருத்துவ இயக்குனர் டாக்டர் அபிராமி ஆகியோர் தங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.
0 coment rios: