சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1-வது கோட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பாமகவை சேர்ந்த இரா.அருள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பதவியேற்றதிலிருந்து, சட்டமன்ற கூட்டத்தொடர், அரசு விழா, கட்சி விழா மற்றும் தொகுதி மேம்பாட்டு பணிகள் சமயம் போக, அவ்வப்பொழுது தொகுதிக்கு உட்பட்ட மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு அதனை நிவர்த்தி செய்தும் வருகின்றார்.
அதன் அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் இரா. அருள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு ரயில்வே துறையினரிடம் இந்த பாதையை அடைக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியில் இருந்து தொட்டியங்காடு வரை செல்லும் சாலை மிகவும் மிகவும் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாமல் இருக்கும் அந்த சாலையை செட் பண்ணிட வேண்டும் என்று சேலம் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு விரைந்து சாலை அமைத்து கொடுத்திட வேண்டுமென்று கேட்டுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், தவறும் பட்சத்தில் பொதுமக்களுடன் இணைந்து தனது தலைமையில் சாலை மறியல் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
பின்னர் காமநாயக்கன்பட்டி பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மாரியம்மன் கோவில் முதல் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் வரை 11.70 ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாக்கடை கால்வாய் அமைத்து வரும் பணியினையும் ஆய்வு செய்தார்.
சட்டமன்ற உறுப்பினரின் இந்த மக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஆய்வு நிகழ்ச்சிகளில் பாமக இளைஞரணி மாவட்ட செயலாளர் விஜயகுமார், டிவிஷன் செயலாளர் மாயக்கண்ணன், டிவிசன் துணைச் செயலாளர் தமிழரசன், ராமு, பகுதி துணைச் செயலாளர் பழனியப்பன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 coment rios: