சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
வண்ணத்தை வைத்து 195 நாடுகளில் பெயரை கூறி அசத்தும் நான்கு வயது சிறுமி...
ஐந்து நிமிடத்தில் 50 திருக்குறள் கூறியும், ஐந்துக்கும் மேற்பட்ட பாரதியார் பாடலை பாடி அசத்தும் நான்கு வயது குட்டி குழந்தை...
சேலம் இரும்பாலை பகுதியில் உள்ள
பூமிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் கீதாலட்சுமி தம்பதியர். விஜயகுமார் ஏசி மெக்கானிக் தொழில் செய்து வருகிறார் இவர்களின்
பெண் குழந்தை ரக்ஷிதா ஸ்ரீ அப்பகுதியில் உள்ள குயின் பிளவர் மழலையர் பள்ளியில்
நான்கு வயது எல்கேஜி படித்து வருகிறார். இந்த குழந்தைக்கு மூன்று வயது நினைவாற்றல் அதிகம் உள்ளதால்பல்வேறு நாடுகளில் பெயர் மற்றும் கொடியின் வண்ணத்தை வைத்து நாட்டின் பெயரை கூறி வந்தார். இதை கவனித்த பள்ளியின் தாளாளர் பாண்டிச்சேரி குழந்தை ரக்ஷிதாவிற்க்கு நினைவாற்றும் திறனை அதிகப்படுத்தும் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார். தற்பொழுது 4 வயதாகும் ரக்ஷிதா ஸ்ரீ வண்ணங்களை வைத்து 195 நாடுகளில் பெயரை அதிவேகமாக கூறுகிறார்.
மேலும் ஐந்து நிமிடத்தில் 50 திருக்குறளையும் ஒப்புவிக்கிறார். அதற்கெல்லாம் ஒரு படிமேல் மகாகவி பாரதியாரின் ஐந்து பாடல்களை இடைவிடாமல் பாடி அசத்தி வருகிறார். இந்த அதீத திறமையால் சிறுமி தன் நான்கு வயதிலேயே இருபதுக்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்துள்ளார் மேலும் பல்வேறு உலக சாதனை புத்தகங்களிலும் இடம் பெற்றுள்ளார் இந்த நிலையில் தான் ஜூன் மாதம் 13ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியிலும் இந்த நான்கு வயது சிறுமி பங்கேற்க உள்ளார்.
சிறுமியின் இந்த நினைவாற்றல் அந்த பகுதி மக்களிடையே அவர்களின் வியப்பை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அந்த சிறுமிக்கு நன்றாக படித்து தமிழகத்தில் முதல்வராக வேண்டும் ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் நோக்கில் ஆட்சி புரிய வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பமாக தெரிவித்துள்ளார்.
0 coment rios: