சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மக்களவைத் தொகுதி
வெற்றி நிலவரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
டி.எம்.செல்வகணபதி (திமுக) – 5,66,085, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விட 70,357 வாக்குகள் வித்தியாசத்தில் சேலம் மக்களவை திமுக உறுப்பினராக டி எம் செல்வகணபதி வெற்றி பெற்றார்.
இவருக்கு சேலம் வீரபாண்டி ஒன்றிய திமுக செயலாளர் திருமதி வெண்ணிலா சேகர், சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் மற்றும் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளர் ஃபிரண்ட்ஸ் D. ரமேஷ் போலிட்ட நிர்வாகிகள் கட்சி துண்டுகளை வழங்கி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதற்கு அடுத்தபடியாக, ப.விக்னேஷ் (அதிமுக ) – 4,95,728,
என். அண்ணாதுரை (பாமக) – 1,27,139 மற்றும் டாக்டர் மனோஜ்குமார் (நாம் தமிழர் ) – 76,207 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தனர்.
சேலம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் அண்ணாதுரை தனது டெபாசிட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 coment rios: