S.K. சுரேஷ்பாபு.
தமிழ்நாடு & புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் அவர்களுக்கு ! தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. வழக்கறிஞர்கள் பாதுகாப்பு மசோதாவும் இது வரை நிறைவேற்றப்படவில்லை.ஆகவே வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்காக வேண்டி தமிழக அரசின் கவன ஈர்ப்புக்காக வேண்டி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையும், சேலம் மாநகர காவல் ஆனையாளர் அலுவலகத்தையும், சேலம் காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தையும் முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திட வேண்டுகிறோம். சேலத்தில் உள்ள சேலம் வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் ஒருச்கினைந்தோ, தனியாகவோ போராட்டத்தை முன்னெடுக்க தயாராக உள்ளோம் என சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகத்தின் சார்பாக, அதன் தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் தெரிவித்துள்ளார்.
0 coment rios: