சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் அவர்களுக்கு சேலம் பச்சப்பட்டி பழனிச்சாமி வாழ்த்து....
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மதிய இணை அமைச்சருமான திரு கே.வி. தங்கபாலு உட்பட முன்னாள் தலைவர்கள் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்களும் பல்வேறு முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன,
கூட்டத்தின் முடிவில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் வசந்த் MP அவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொது குழு உறுப்பினர் சேலம் பச்சப்பட்டி பழனிச்சாமி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் சேகர், 59வது டிவிஷன் தலைவர் சீனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: