S.K. சுரேஷ்பாபு.
சேலம் பழைய பேருந்து நிலையம் ராஜகணபதி திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா தினத்தை முன்னிட்டு 1008 கலசாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவில் இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் குறிப்பாக தமிழ் மாதங்களில் பல்வேறு சிறப்பு வைபவங்கள் நடைபெறுவது வழக்கம் ராஜகணபதி திருக்கோவிலுக்கு கும்பாபிஷேக வைபவம் 10 ஆண்டு முடிந்து 11வது ஆண்டை தூங்குவதை முன்னிட்டு ஸ்ரீ ராஜகணபதிக்கு நேற்று சிறப்பு வைபவ நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்தை தொடர்ந்து இன்று காலை விக்னேஸ்வர பூஜை சித்தி சைவீக புண்ணியாக வாசனம் பஞ்சகவ்யம் துவார மண்டல பூஜை மூல மந்திர ஹோமம் என பல்வேறு சிறப்பு ஹோமம் நடைபெற்று மகாபூர்ணா ஹுதி செய்யப்பட்டது. தொடர்ந்து 1008 கலச தீர்த்தத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பூஜை செய்யப்பட்ட 1008 கலச தீர்த்தத்தை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பின்னர் ராஜகணபதிக்கு 1008 கலச தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து விநாயகப் பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூ வியாபாரிகள் சங்கம் சார்பில் டன் கணக்கில் பூக்களை உர்வலமாக கொண்டுவரப்பட்டது.
தொடர்ந்து விநாயகருக்கு பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றன பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 1008 கலசம் அபிஷேகம் மற்றும் விநாயகரை தரிசிக்க அப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன விழாவின் ஏற்பாட்டினை திருக்கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
0 coment rios: