சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி, முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி பாழடைந்த பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நியாய விலைக் கடையை பொதுமக்களின் நலன் கருதி ரூபாய் 24.26 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறப்பு..விழா ....
சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நியாய விலை கடையை திறந்து வைத்து முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார் .
நைனாத்தாள் ஏரி பகுதியில் 30 வருடங்களாக குடிநீர் பிரச்சினை உள்ளது என அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் நமது சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 30,000 லிட்டர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தார். மரத்துக்குட்டை கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பட்டினத்தில் இருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறந்து வைத்தார் .
முத்துநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா, மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ் , ஒன்றிய செயலாளர் காமராஜ், துணைத்தலைவர் சத்தி, வெங்கடேஷ், வக்கீல், திருநாவுக்கரசு, சௌந்தர்ராஜ், அண்ணாதுரை, அங்கமுத்து, மோகன், அசோகன், கோவிந்தராஜ், வெங்கடபதி, வார்டு நம்பர் செல்வராஜ், ஏடிசி பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .
0 coment rios: