ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 5வது மாடியில் ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகம் இயங்குகிறது. இந்த நிலையில், ஊரக வளர்ச்சித் துறையின் வளர்ச்சி பணிகளை அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ஒதுக்கீடு செய்ய, லஞ்சம் பெறுவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினருக்கு புகார் சென்றது.
புகாரின் பேரில், நேற்று (4ம் தேதி) மாலை ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் திடீரென ஈரோடு லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையிலான காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையில், அங்கு உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வந்த மோகன்பாபு (வயது 45) மற்றும் லஞ்சம் கொடுக்க வந்த ஒப்பந்ததாரர் ஆகியோரிடம் இருந்து மொத்தம் ரூ.10 லட்சத்து 98 ஆயிரம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும், இதுதொடர்பாக மோகன்பாபு மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
0 coment rios: