சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தத்திற்கு வழக்கறிஞர்கள் மட்டும் போராடுகிறோம். அரசியல் கட்சிகளோ, இயக்கங்களோ மற்றும் அமைப்புகளோ ஏன் இப்பொழுது வரை போராடவில்லை. சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு. இமையவரம்பன் கேள்வி....
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு. இமயவரம்பன், முப்பெரும் குற்றவியல் சட்டம் குறித்து வழக்கறிஞர்கள் மட்டுமே மேற்கொண்டு வரும் போராட்டம் குறித்து தெரிவித்துள்ள விளக்கம் இதோ,
நாளை 5-7-24 ம் தேதி சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ள கண்டன ஆர்ப்பாட்டம் யாருக்காக?? எதற்காக? ? வெறுமனே சட்டத்தின் பெயரை சமஸ்கிருதத்தில் மாற்றியதற்காக வழக்கறிஞர்கள் போராடுகிறோமா ? இல்லை.....இந்த சட்ட திருத்தத்தில் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுகிறோமா ??? சத்தியமாக வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவதில்லை ....பின் ஏன் போராடுகிறோம்? இந்த சட்டத்தின் படு பயங்கர விளைவுகளை உணர்ந்ததால் , எதிர்காலத்தில் பொது மக்களை பாதுகாத்திட இப்போது நாங்கள் போராடுகிறோம். ஆம் தெரிந்து கொள்ளுங்கள் BNS பிரிவு 152 சொல்கிறது அரசுக்கு எதிராக பிரிவினை வாத செயலை ஊக்குவித்தாலோ, உதவினாலோ,தூண்டினாலோ அல்லது தூண்ட முயற்சி செய்தாலோ ஆயுள் தண்டனை விதிக்கலாம்.... அது மட்டுமல்ல BNSS சட்டப்பிரிவு 172 சொல்கிறது காவல் அதிகாரிகளின் கட்டளைக்கு அனைவரும் கட்டப்பட வேண்டும் அவ்வாறு கட்டுப்பட வில்லை என்றால் அதுவே குற்றம் அதற்கே கைது செய்யலாம் ....அது மட்டுமல்ல புதிய சட்டப்பிரிவுகளின் படி குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து BNSS பிரிவு 85 ன்படி அவரது சொத்துகளை ஜப்தி செய்யலாம் BNSS பிரிவு 356 ன் படி குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இல்லாமலேயே வழக்கை விசாரித்து தீர்ப்பும் கூறலாம் .... நீதிமன்றத்தின் செயலை பொது வெளியில் விமர்சித்தால் BNS பிரிவு 73ன் படி அவர்களை இரண்டாண்டு தண்டிக்கலாம் என்று சொல்கிறது ...தற்போது இச்சட்டம் அமூலுக்கு வந்துள்ளது..தடுத்து நிறுத்தப்படா விட்டால் என்ன, என்ன விளைவுகள் ஏற்படும்? ? சிந்தியுங்கள் உங்கள் அமைப்போ, இயக்கமோ, கட்சியோ ஏன் உங்கள் தலைவர்களோ இது வரை போராட தயாராகவில்லை .. வழக்கறிஞர்கள் நாங்கள் போராடிக்கொண்டிருக்காறோம் என்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெ.மு. இமயவர்மன் விளக்கம் அளித்துள்ளதோடு, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் வழக்கறிஞர்களாகிய தாங்கள் மட்டுமே போராடி வருகிறோம் என்றும் ஏன் இது சம்பந்தமாக எந்த அமைப்புகளோ இயக்கங்களோ கட்சிகளோ தற்பொழுது வரை போராட்டத்தை கையில் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.
0 coment rios: