ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் பெருந்துறை சீனாபுரம் ரோடு ஐயப்பன் நகர் பகுதியில் தனது நண்பரை பார்க்க நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு காஞ்சிக்கோவில் தெற்கு ரத வீதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 40) என்பவர் வந்துள்ளார்.
அவர், அந்த வாலிபரிடம் தனக்கு தெரிந்த காஞ்சிக்கோவில் விருப்பமதியைச் சேர்ந்த பெண் புரோக்கரான வளர்மதி (வயது 38) என்பவர் சுள்ளிபாளையத்தில் பெண்ணை வைத்து விபசாரம் செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும், ரூ.2,000 தந்தால் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, கார்த்தி அந்த வாலிபரிடம் செல்போனில் பெண்களின் புகைப்படங்களை காட்டியதோடு, வாலிபரை இருசக்கர வாகனத்தில் சுள்ளி பாளையத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்த பொழுது உள்ளே இரு பெண் இருந்துள்ளார்.
அவர்களிடம் அந்த வாலிபர் விசாரிக்கையில், பெருந்துறையில் வீட்டு வேலை இருப்பதாக கூறி விபசார தொழிலில் ஈடுபட வற்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து அந்த வாலிபர் என்னிடம் ரூ.1,000 குறைவாக உள்ளது நண்பரிடம் வாங்கி வருகிறேன் எனக் கூறி சென்று, பெருந்துறை காவல் நிலையம் வந்துள்ளார்.
அப்போது, வழியில் பெத்தாம்பாளையம் பிரிவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்கிருந்த போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வளர்மதி, கார்த்தியை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த இரு பெண்களையும் மீட்டனர்.
0 coment rios: