சனி, 6 ஜூலை, 2024

திருப்பூர் கேஎம்சி சட்டக் கல்லூரி சார்பில் ஜூலை.28ல் மாரத்தான்: முன்பதிவு துவக்கம்

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் கேஎம்சி சட்டக் கல்லூரி சார்பில் ஜூலை 28ம் தேதி மாரத்தான் போட்டி நடைபெறுவதையொட்டி முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது.

கேஎம்சி சட்டக் கல்லூரி உலக இயற்கை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு வருகின்ற ஜூலை மாதம் 28ஆம் தேதி திருப்பூரில் "இயற்கை பாதுகாப்பு மாரத்தான் ஓட்டம்" என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடத்துகின்றது.

இப்போட்டிக்கான பதிவு துவக்கம், திருப்பூர் காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா அவர்கள் போட்டியின் இணையதளத்தை கடந்த 3ம் தேதியன்று வெளியிட்டு துவக்கி வைத்தார். இவ்வெளியீட்டு நிகழ்வில், கேஎம்சி சட்டக் கல்லூரி தாளாளர் திருமதி ஜி அருணா ஸ்ரீதேவியிடம் திரு அபிஷேக் குப்தா அவர்கள் சிற்றேடு அளித்து வாழ்த்து தெரிவித்தார்.
 
இந்நிகழ்வில், கேஎம்சி சட்டக் கல்லூரி செயலாளர் செல்வி ஜி ஞான வர்ஷினி, திரு விஷ்ணு யசஸ்வந்த், கல்லூரி முதல்வர் முனைவர் திரு எம்.எஸ். சௌந்தரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

15 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள் இரண்டு பிரிவுகள் ஆகவும், 25 வயதுக்கும் மேட்பட்ட ஆண்கள் பெண்கள் இரண்டு பிரிவுகள் ஆகவும் மொத்தம் நான்கு பிரிவுகள் உள்ளன.

 வெற்றியாளர்களின் பரிசுத்தொகை ரூபாய் 72,000 மாரத்தான் ஓட்டம் பெருமாநல்லூர் கே எம் சி சட்டக் கல்லூரியில் தொடங்கி, 8.5 கி.மீ. வட்டமிட்டு அதே இடத்தில் முடிவடையும். மாரத்தான் போட்டிக்கான பதிவு www.conservenaturerun.com என்ற இணையதளத்தில் நடைபெறத் துவங்கி உள்ளது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: