கடந்த ஒரு வாரமாக நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக நீலகிரி மலைப்பகுதியில் மழை இல்லாததால், அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது.
நேற்று (28ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 6,483 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (29ம் தேதி) காலை 8 மணி நிலவரப்படி 4,706 கன அடியாக சரிந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை 88.86 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 89.44 அடியாக உயர்ந்தது.
அதேபோல், அணையில் நீர் இருப்பு 20.85 டிஎம்சியிலிருந்து 21.22 டிஎம்சியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,300 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 1,305 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
0 coment rios: