நான் திட்டமலை கல்லூரி மாணவிகள் விடுதியில் தங்கி, அரசு கலை அறிவியல் கல்லூரி திட்டமலையில் பயின்று வருகிறேன். திட்டமலை விடுதி மற்றும் பவானி மகளிர் விடுதிக்கு வார்டனாக புவனா என்பவர் பணியாற்றி வருகிறார். விடுதிக்கு காப்பாளர் புவனா ஒரு ஆண் நண்பருடன் அடிக்கடி வருவார்.
அடிக்கடி இவர்கள் விடுதிக்கு வந்து தனி அறையில் கதவைத் தாளிட்டு உள்ளே வெகு நேரம் இருப்பது எங்களுக்கு மிகவும் கேவலமாக இருந்தது. ஆகவே, இதனை புகார் அளிக்க வேண்டும் என்று போட்டோ எடுத்தேன். நான் எடுத்த போட்டோவை மேலதிகாரிகள் விடுதிக்கு ஆய்வுக்கு வந்தால் காண்பித்திட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் விடுதிக்கு ஆய்வுக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. ஆகவே நான் எடுத்த போட்டோவை காண்பிக்க முடியவில்லை. என்னைப் போலவே மேலும் மூன்று மாணவிகளை வெளியில் அனுப்பி உள்ளனர்.
விடுதியில் நடைபெறும் வார்டனின் பாலியல் ரீதியான செயல்களை நாங்கள் பார்ப்பதால் இளம் வயதுள்ள எங்களுக்கு மிகவும் பயத்தை ஏற்படுத்துகிறது. விடுதியில் பயத்துடனே நாட்களை கழிக்க வேண்டி உள்ளது. நாங்கள் தங்கியுள்ள விடுதியில் அதிகபட்சமாக 25 மாணவிகளே தங்க இடம் உண்டு. ஆனால் 100 மாணவிகள் தங்கி உள்ளதாக பொய்யான வருகையை எடுத்து அரசு பணத்தை கொள்ளையடிக்கின்றனர்.
ஆனால் போட்டோ எடுத்த காரணத்தால் என்னை மட்டும் விடுதியில் இருக்கக் கூடாது என்று வலுக்கட்டாயமாக துன்புறுத்தி கடிதம் எழுதி வாங்கிவிட்டு வெளியில் அனுப்பி விட்டார்கள். இந்த ஆண்டு நான் இறுதி ஆண்டு படித்து வருகிறேன். என்னை வெளியேற்றியதால் என் ஊரில் இருந்து பேருந்து மூலம் வந்து படித்து செல்வது மிகவும் கடினமாக உள்ளது.
ஆகவே என்னை மீண்டும் விடுதியில் தங்க அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: