சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலத்தை அடுத்துள்ள முருங்கபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா.
வீரபாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட முருங்கப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை வகித்தார்.
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக பள்ளியில் கொண்டாடப்பட்டது. காமராஜரை பற்றி மாணவர்களின் பேச்சு போட்டி மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றது.
இதனை அடுத்து, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் இன்று பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டது. புதிய பாரத எழுத்தறிவு திட்டம் எழுத்தறிவற்றோருக்கு பாதிப்பா? பலனா ?என்னும் ஆசிரியர் விவாதம் மேடை நடைபெற்றது.
ஆசிரியர்கள் மற்றும் கற்போர் ,ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மரம் நடும் விழா. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அவர்களால் கற்போருக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி சசிகலா அவர்களுக்கு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. பின்னர் விழாவில், மாணவ மாணவிகள் கற்போர் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.
முருகபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழா நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரிய பெருமக்கள்,
சலேத் மேரி, ஜெயலட்சுமி,
கண்ணகி, கவிதா, சரஸ்வதி, தேன்மொழி மற்றும் பூபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: