சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
கல்விக்கண் திறந்து கர்மவீரரின் பிறந்தநாள் விழா. சேலம் அஸ்தம்பட்டிகள் உள்ள CSI ஹோபார்ட் பள்ளி மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் வெஜ் பிரியாணி....
ஆண்டுதோறும் ஜூலை 15ஆம் தேதி கல்வித்தந்தை காமராஜர் ஐயா அவர்களின் பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், கர்மவீரரின் பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சிஎஸ்ஐ ஹோபார்ட் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் ஐயா காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி.டேப்பினி கிறிஸ்டினா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சேலம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி கல்வி அலுவலர் திருமதி. பிரேம குமாரி, பள்ளி தாளாளர் திரு ஜெய் சிங் ராஜேந்திரன் மற்றும் தியாபி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, பள்ளி மாணவிகளுக்கு இனிப்பு பொங்கல் மற்றும் வெஜ் பிரியாணியை மதியம் வழங்கினர்.
0 coment rios: