சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த சில நாட்களாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கட்சியினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சேலம் கோட்டை பகுதியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாவட்ட மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட மாணவர் அணி செயலாளர் கவியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் முத்துலட்சுமி வீரப்பன், மாநில பொதுச் செயலாளர் ஜெயமோகன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
புதிய சட்டத்தால் மக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் இந்த மூன்று சட்ட திருத்தங்களையும் உடனடியாக திரும்ப பெற வேண்டும், சட்டத்திருத்தத்தின் மூலம் இந்தி சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
0 coment rios: