சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கு பதிய ஏற்பாடு. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் திரு.சபரீசன் அவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ. மு.இமயவரம்பன் தகவல்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நீதிமன்றங்களை புறக்கணித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றங்களை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவர்மன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த முப்பெரும் குற்றவியல் சட்ட திருத்தங்களை வாபஸ் பெரும் வரையில் தங்களது போராட்டம் தீவிர படுத்தப்படும் என்றும், நாடு முழுவதும் இந்த பிரச்சனை தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், அடுத்த கட்ட போராட்டமாக ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்த சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக அனுமதி கேட்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் காவல்துறையினர் அனுமதியை மறுத்துவிட்டனர் என்றும் மேலும் BMS, BMSS சட்டப்பிரிவுகளில் படி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதனையும் மீறி தடையை தாண்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என வழக்கறிஞர்கள் சங்கம் கூறியது தொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் உள்ள தபால் நிலையம் முன்பு போராட்டம் நடத்திக் கொள்ளுங்கள் என்று காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கே போராடுவதற்கு உரிமை இல்லை என காவல்துறையினர் எழுத்துப்பூர்வமாக கொடுத்த எச்சரிக்கை இந்த தடையை சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வினா எழுப்ப இருப்பதாகவும், இந்த சட்ட திருத்தம் குறித்து இருக்கின்ற பாதகமான அம்சங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வழக்கு தொடுக்க இருக்கிறோம் என்றும் ஏன் என்று சொன்னால் இந்த அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கின்ற அடிப்படை உரிமைகளுக்கு உட்பட்டு தான் சட்டத்திருத்தங்கள் கொண்டு வந்ததாக வேண்டும் என்பது விதி. அந்த அடிப்படை உரிமைகளான பேச்சு எழுத்து உரிமை வழங்கி உள்ளது. இந்த பேச்சு எழுத்து உரிமைகளை பறிக்கும் வண்ணம் நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் ஒரு வழக்கு குறித்து நீதிமன்ற அனுமதி பெறாமல் யாரேனும் செய்தி வெளியிட்டால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம் என ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்து உள்ளனர்.
இது பேச்சு உரிமையை பறிக்கும் அராஜக போக்காக சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் கருதுவதாகவும் அதுமட்டுமல்ல இதுவரை சட்டம் என்பது ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் என்றும் ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட கூடாது என்று இருந்தது. ஆனால் புதிய சட்ட திருத்தத்தில் ஒரு நபர் மீது குற்றம் சாட்டப்படுகிறது என்றால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அந்த நபரே இல்லாமல் வழக்கை விசாரித்து நீதி கூறலாம் என சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் எந்த காவல் நிலையத்திலும் வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்யலாம் என்று சட்டத்திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். அதன் விளைவாக இடம் ஓரிரு நாட்களில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்த சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு. இமயவரம்பன், சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக முப்பெரும் குற்றவியல் சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்தங்களுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே முடிவெடுத்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் திரு. சபரீசன் அவர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தை சேர்ந்த எந்த வழக்கறிஞர் சங்கமும் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்துடன் இணைந்து கொள்ளலாம் என்று அழைப்பும் விடுத்துள்ளார்.
0 coment rios: