சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் பசுமை தாயக நாள் நிகழ்ச்சிகள் கொண்டாடியே சேலம் பாமகவினர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழுக்காகவும் தமிழக மக்களின் உணர்வுகளுக்காகவும் அதுமட்டுமல்லாமல், வன்னியர் சமுதாய மக்களின் எழுச்சிக்காகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி தற்பொழுதும் அனைத்துக் கட்சியினராலும் மருத்துவர் ஐயா என்று போற்றப்படும் Dr
ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சேலம் மாநகர் மாவட்ட பாமக சார்பில், அருள்மிகு ஸ்ரீ ராஜகணபதி கோயிலில் சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை செய்யப்பட்டது. பின்பு பாரதி அறக்கட்டளை மூலம் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து சேலம் நான்கு ரோடு பகுதியில் பெரம்பலூர் பாமக கொடி ஏற்றி பள்ளி குழந்தைகளுக்கு பேக் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. அழகாபுரம் மிட்டா புதூர் அன்னை தெரசா ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் 86 இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சேலம் தெற்கு தொகுதி 60-வது டிவிசன் சார்பாக கொடியேற்றம் நிகழ்ச்சி மரக்கன்று நடும் நிகழ்ச்சி. அன்னதானப் பட்டியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு உபகரணங்கள் வழங்க நிகழ்ச்சி. தாதம்பட்டி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவர் ஐயா அவர்கள் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை, அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது சேலம் அருள்மிகு ஸ்ரீ சுகவனேஸ்வரர் கோவிலில் தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அழகாபுரத்தில் உள்ள லோட்டஸ் ஆதரவற்றோர் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது.மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் சார்பாக 150-க்கும் மேற்பட்ட இடங்களில் கொடியேற்றும் நிகழ்ச்சி மரக்கன்று நடும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சேலம் மாநகர் மாவட்ட பாமக செயலாளருமான இரா. அருள் எம்.எல்.ஏ, மாநகர மாவட்ட செயலாளர் கதிர்.ராஜரத்தினம் மாவட்டத்தினம், தலைவர், மாவட்ட அமைப்புச் செயலாளர் வக்கீல் குமார், ராஜமாணிக்கம் மாவட்ட துணைச் செயலாளர், சின்னசாமி,அண்ணாமலை, சத்ரிய சண்முகம்,கார்த்தி ஈஸ்வரன்,சமயவேல் பகுதி செயலாளர்கள், சுந்தர்ராஜன் தொழிற்சங்க செயலாளர்,சங்கர்,பாட்டாளி சுப்பிரமணி,மணி, பூபதி ரஞ்சித்,மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விஜயகுமார், இளவரசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: