இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஆடிப்பெருந் தேர்த்திருவிழா மற்றும் புகழ்பெற்ற கால்நடை சந்தை, குதிரை சந்தை நடைபெறவுள்ளது. இவ்விழாவில், லட்சக்கணக்கானோர் வந்து சுவாமியை வழிபாட்டு செல்வர்.
இதையொட்டி, பேருந்து வசதி, தற்காலிக பேருந்து நிலையம், கால்நடை மற்றும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்துவது, தற்காலிக மருத்துவ முகாம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் உமாசங்கர், கோபி கோட்டாட்சியர் கண்ணப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, கோயில் பரம்பரை அறங்காவலர்கள் சாந்தப்பன், குருராஜேஷ், செயல் அலுவலர் மோகனப்பிரியா, பவானி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினி, அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் கஸ்தூரி, மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
0 coment rios: