சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம். மத்திய அரசு திரும்ப பெற தவற தவறும் பட்சத்தில் சிறையில் நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜெ.மு. இமயவரம்பன் எச்சரிக்கை.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஐந்து நாட்களாக நீதிமன்றங்களை புறக்கணித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றங்களை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து கண்களில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவரம்பன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கண்களில் கருப்பு துணி கட்டி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதுமட்டுமல்லாமல் சேலம் ஏற்காடு பிரதான சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சேலம் ஏற்காடு பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த போராட்டம் குறித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவரம்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த சட்ட திருத்தத்தில் வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுகிறோமா ??? சத்தியமாக வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவதில்லை ....பின் ஏன் போராடுகிறோம்? இந்த சட்டத்தின் படு பயங்கர விளைவுகளை உணர்ந்ததால் , எதிர்காலத்தில் பொது மக்களை பாதுகாத்திட இப்போது நாங்கள் போராடுகிறோம். ஆம் தெரிந்து கொள்ளுங்கள் BNS பிரிவு 152 சொல்கிறது அரசுக்கு எதிராக பிரிவினை வாத செயலை ஊக்குவித்தாலோ, உதவினாலோ,தூண்டினாலோ அல்லது தூண்ட முயற்சி செய்தாலோ ஆயுள் தண்டனை விதிக்கலாம்.... அது மட்டுமல்ல BNSS சட்டப்பிரிவு 172 சொல்கிறது காவல் அதிகாரிகளின் கட்டளைக்கு அனைவரும் கட்டப்பட வேண்டும் அவ்வாறு கட்டுப்பட வில்லை என்றால் அதுவே குற்றம் அதற்கே கைது செய்யலாம் ....அது மட்டுமல்ல புதிய சட்டப்பிரிவுகளின் படி குற்றம் சாட்டப்பட்ட நபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து BNSS பிரிவு 85 ன்படி அவரது சொத்துகளை ஜப்தி செய்யலாம் BNSS பிரிவு 356 ன் படி குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இல்லாமலேயே வழக்கை விசாரித்து தீர்ப்பும் கூறலாம் .... நீதிமன்றத்தின் செயலை பொது வெளியில் விமர்சித்தால் BNS பிரிவு 73ன் படி அவர்களை இரண்டாண்டு தண்டிக்கலாம் என்று சொல்கிறது ...தற்போது இச்சட்டம் அமூலுக்கு வந்துள்ளது..தடுத்து நிறுத்தப்படா விட்டால் என்ன, என்ன விளைவுகள் ஏற்படும்? ? சிந்தியுங்கள் உங்கள் அமைப்போ, இயக்கமோ, கட்சியோ ஏன் உங்கள் தலைவர்களோ இது வரை போராட தயாராகவில்லை .. வழக்கறிஞர்கள் நாங்கள் போராடிக்கொண்டிருக்காறோம் என்று சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஜெ.மு. இமயவர்மன் விளக்கம் அளித்துள்ளதோடு, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் வழக்கறிஞர்களாகிய தாங்கள் மட்டுமே போராடி வருகிறோம் என்றும் ஏன் இது சம்பந்தமாக எந்த அமைப்புகளோ இயக்கங்களோ கட்சிகளோ தற்பொழுது வரை போராட்டத்தை கையில் எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளதோடு மத்திய அரசு இந்த மூன்று சட்டங்களையும் திரும்ப பெற தவற தவறும் பட்சத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகளையும் ஒன்றிணைத்தும் பொது மக்களை ஒன்று திரட்டியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் இடுவதோடு சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த சங்கத்தின் தலைவர் இமயவரம்பன் எச்சரித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் முருகன் பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
0 coment rios: