சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த ஐந்து நாட்களாக நீதிமன்றங்களை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களை புறக்கணித்து கையில் கருப்பு துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விவேகானந்தர் தலைமையில்,
நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து திடீரென நீதிமன்ற வளாகம் முன்பு அஸ்தம்பட்டி ஏற்காடு பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர் இதனையடுத்து நீதிமன்ற வளாகம் முன்பு இன்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர் இந்த மறியல் போராட்டத்தில் செயலாளர் நரேஷ் பாபு பொருளாளர் அசோக்குமார் மூத்த வழக்கறிஞர்கள் பொன்முடி மணி ரகுநாதன் ஜெகநாதன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
0 coment rios: