S.K. சுரேஷ்பாபு.
திருக்கோவில் நிலத்தில் அத்துமீறி தகரக் கொட்டாய் அமைத்து ஊர் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சிவலிங்கம் என்பவர் மீது கோட்டாசியர் விசாரணைக்கு உத்தரவிட என வலியுறுத்தல்.. மல்லமூப்பம்பட்டி கிராம மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு.
சேலம் அருகே உள்ள மல்லமூப்பம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட மூலக்கடை பிரதான சாலையில் தங்கள பங்காளிகளின் அனுபவத்தில் உள்ள கருப்புசாமி திருக்கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் அதே பகுதியை சேர்ந்த எல் ஐ சி நிறுவனத்தில் பணியாற்றும் சிவலிங்கம் என்பவர் தங்களுடைய அனுமதி இல்லாமல் அத்துமீறி திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து கலவரம் தூண்டும் வகையில் மிரட்டி வருகிறார் எனக் கூறி அந்த பங்காளிகளில் ஒருவரான செந்தில்குமார் என்பவர் அவரது வகையறாக்கள் ஆகியவருடன், தமிழ்நாடு கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணை செயலாளருமான சரஸ்ராம் ரவி ஒருங்கிணைப்பின் பேரில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுப்பதற்காக இன்று வந்திருந்தனர்.
அந்த மனுவில் சிவலிங்கம் என்பவர் ஆக்கிரமிப்பு செய்தது குறித்தும், திருக்கோவிலுக்கு சொந்தமான வாத்தியமுடைய பங்காளிகளை மிரட்டி வருவது குறித்தும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சேலம் மாவட்ட முதன்மை உரிமைகள் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2003 ஆம் ஆண்டு தங்களது பங்காளிகளின் கருப்புசாமி கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் எங்களது பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், எதிரியான எல்.ஐ.சி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சிவலிங்கம் என்பவர் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கில் அத்துமீறி கோவில் பொது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல் கூடாரம் போட்டதை அப்புறப்படுத்தி பொது அமைதிக்கு வழி வகுக்க வேண்டும் எனவும் கோவில் பொது இடத்தை கோட்டாட்சியர் அவர்கள் நேரடி பார்வையிட்டும் விசாரணை நடத்தியும் நீதி வழங்கிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் அந்த இடத்தில் பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் எல்ஐசி ஊழியர் சிவலிங்கம் மீது கோட்டாட்சியர் விசாரணை செய்து கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இந்த அத்துமீறல் அபகரிப்பு குறித்து பங்காளிகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இணைந்து ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம் என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
0 coment rios: