சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி குற்றவியல் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து கோரிக்கை பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம். மத்திய அரசு திரும்ப பெரும் வரை போராட்டம் தீவிர படுத்தப்படும் என்றும் எச்சரிக்கை.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10-வது நாட்களாக நீதிமன்றங்களை புறக்கணித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றங்களை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க முப்பெரும் குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக சேலம் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் தபால் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவரம்பன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கைகளில் பதாகைகளை ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
இந்த போராட்டம் குறித்து சேலம் மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் இமயவரம்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பாதிக்கப்படும் வகையிலும் அமைந்துள்ள இந்த மூன்று சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்ப பெரும் வரை தங்களது போராட்டம் தீவிரமாக நடைபெறும் என்றும் எச்சரித்துள்ளார்.
முருகன் பொருளாளர் கண்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்ட திருத்தங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
0 coment rios: