சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட BSP மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு, சேலம் முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் மலரஞ்சலி.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் நடைபெற்ற இந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து பல்வேறு கட்சியினரும் பல்வேறு அமைப்பு மற்றும் இயக்கங்களைச் சார்ந்த தலைவர்களும் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சேலம் வழக்கறிஞர்கள் முற்போக்கு சங்கத்தின் சார்பில் சேலம் நீதிமன்ற நுழைவாயிலில் BSP மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ் ராங் அவர்களின் உருவப்படம் வைக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வழக்கறிஞர் சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த மலர் அஞ்சலி நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் சந்தியூர் பார்த்திபன், ஐயப்ப மணி, பிரதாபன், நாச்சிமுத்து ராஜா, வீரபாண்டி ரமேஷ், கிருஷ்ணராஜ் இம்தியாஸ் கான் மற்றும் ஷாஜகான் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு முழக்கங்களையும் எழுப்பினர்.
இது கறித்து வழக்கறிஞர்கள் சசிகுமார் மற்றும் சந்தியூர் பார்த்திபன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்னையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை வன்மையாக கண்டிப்பதாகவும், சமீபகாலமாக தலித் போராளிகளை குறிவைத்து தமிழகத்தில் அரங்கேறி வரும் படுகொலை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறையில் பலமுறை புகார் தெரிவித்தும் தற்பொழுது வரை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்த படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் இனியும் தமிழகத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக சம்பந்தமே இல்லாத சிலரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் இந்த கொலை சம்பவத்தை முழுமையாக விசாரிக்க சிபிஐ மற்றும் NIA விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
0 coment rios: