சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வேண்டும் என்பதை வலியுறுத்தி, 108 தேங்காய்களை உடைத்து ஆரிய வைசிய முன்னேற்ற பேரவை நிறுவனர் Dr. நாகா. அரவிந்தன் வேண்டுதல்.
திரைப்பட நடிகரும், ரெட் ஜெயன்ட் திரைப்பட தயாரிப்பு நிறுவன உரிமையாளரும் மற்றும் திமுக இளைஞரணி மாநில செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றார். இதனை அடுத்து சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை திமுகவினர் இடையை வலுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆரிய வைசிய முன்னேற்ற பேரவையின் நிறுவனரும், தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் கூட்டமைப்பின் தலைவருமான Dr. நாகா அரவிந்தன் சேலத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகணபதி திருக்கோவிலில் 108 தேங்காய்களை உடைத்து வேண்டுதல் பூஜை நடத்தினார்.
திமுகவினர் இடையே உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், இதற்கு ஒரு படி மேலே சென்று தமிழக அளவில் முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காக 108 தேங்காயை உடைத்த பல்வேறு விருதுகளை குவித்துள்ள சேலத்தை சேர்ந்த சிறந்த சமூக ஆர்வலர் Dr. நாகா. அரவிந்தனின் செயல் திமுகவினர்களிடையே வரவேற்பினையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பது மட்டும் நிதர்சனம்.
இந்த நிகழ்ச்சியில் வேண்டுதலை இணைந்து நடத்திய அமைப்புகளின் நிர்வாகிகள் பாபு கேசவன் குமார் மற்றும் வெங்கடேசன் கலந்து கொண்டனர்.
0 coment rios: