சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் பரிந்துரையின் பேரில் 31 வது கோட்டத்தில் கான்கிரீட் தரை தளம் அமைக்கும் பணி தொடங்கியது.
60 கோட்டங்களை உள்ளடக்கியது சேலம் மாநகராட்சி. ஒவ்வொரு கோட்டத்திற்கும் மாமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், சேலம் 31வது கோட்ட திமுக பகுதி செயலாளர் சையத் இப்ராஹிம் உட்பட அந்த பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் மிகவும் பழுதடைந்துள்ள இரண்டு நியாய விலை கடைகள் தரைத்தளம் மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலையை சீரமைத்து கான்கிரீட் தளம் அமைத்து தர வேண்டும் என்று சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் இராஜேந்திரன் அவர்களிடம் கேட்டு கொண்டனர்.
அதன் அடிப்படையில்,
சட்டமன்ற உறுப்பினர் இராஜேந்திரன் சேலம் மாநகராட்சி நிர்வாகத்திடம் பரிந்துரை செய்தார்.
சட்டமன்ற உறுப்பினரின் பரிந்துரையை ஏற்று, சேலம் மாநகராட்சியின் 31வது கோட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகள் எண்(AA020), (AA022) மற்றும் அதனை ஒட்டியுள்ள சாலை ஆகியவை
சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நவீன கான்கிரீட் தரை தளம் போடும் பணிகள் தொடங்கியது.
இதனை வரவேற்று, சேலம் வடக்கு தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் இராஜேந்திரன் மற்றும் 31வது கோட்ட திமுக செயலாளர் சையத் இப்ராஹிம் ஆகியோருக்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளனர். இந்த தரை தளம் அமைக்கும் பணியின் போது, 31வது கோட்ட திமுக நிர்வாகிகள் பைசில்லாத பிரபு, ஹர்ஷத், ஜாவித், யாரப், நசீர் மற்றும் நதியும் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 coment rios: