இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (21ம் தேதி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், வாணிபுத்தூர் உள்வட்டம், புஞ்சைதுறையம்பாளையம் 'அ' கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த தனியார் கல்குவாரியில் நேற்று (20ம் தேதி) மாலை சுமார் 5.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த வெடி விபத்தில், கல் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கோபிசெட்டிபாளையம் வட்டம் அயலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 50) மற்றும் கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம் மாட்டவள்ளி பகுதியைச் சேர்ந்த அஜீத் (வயது 27) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த குடும்பத்தினருக்கும் அவர்களது வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 coment rios: