சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்க வேண்டும். சேலத்தில் நடைபெற்ற விடுதலை குரல் மாத நாளிதழில் நிருபர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் அவர்களை சிறப்பு ஆசிரியராக கொண்டு வெளி வந்து கொண்டிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் அங்கீகாரம் பெற்று மாத இதழான விடுதலை குரல் மாத நாளிதழில் நிருபர்கள் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம் சேலம் சின்ன திருப்பதி பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. விடுதலைக் குரல் நாளிதழின் ஆசிரியர் வழக்கறிஞர் முல்லை அன்பரசு வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த கடந்தாய்வு ஆலோசனை கூட்டத்திற்கு, நாளிதழில் இணை ஆசிரியரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பின் மாநில துணை செயலாளருமான சரஸ்ராம் ரவி தலைமையில் நடைபெற்ற இன்று ஆலோசனை கூட்டத்தில், அமைப்பின் நிர்வாகிகள் மாயாவதி, ராஜசேகர் ஜெயக்குமார் தினேஷ் விஜயகுமார் அண்ணாதுரை உட்பட மாவட்ட நிருபர்கள் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை குரல் மாத நாளிதழின் செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட நிருபர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 2026-ல் நடைபெற உள்ளே தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகித்து வெற்றி பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சபாநாயகர் பதவி வழங்க வேண்டும் மற்றும் மற்றும் தமிழகம் முழுவதும் பட்டியல் இன மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதலை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றி குறிப்பாக வன்கொடுமை குற்றங்களை தடுத்து நிறுத்து ஆயத்தம் ஆகும் வகையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் மூலமாக இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் விடுதலை குரல் நாளிதழ் நிர்வாகத்தின் சார்பாக தமிழக அரசே கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 coment rios: